test

இந்த இணையதளபக்கம்,இயற்கை,அரசியல்,வரலாறு போன்ற பல தகவல்களை பேசக்கூடியது. தொடர்ந்து இணைந்திருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.

இயற்கை போராளி நம்மாழ்வாரின் கரைந்து போன கனவு...

 இயற்கை போராளி நம்மாழ்வாரின் கரைந்து போன கனவு...


இயற்கைக்காகவும் இயற்கை விவசாயத்திற்காகவும் தன் வாழ்கையையே அற்பணித்த இயற்கை போராளி நம்மாழ்வார் என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை ஆகும்.


அத்தகைய போராளியின் வாழ்க்கை காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் துவங்கி, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் வரை போராட்டத்திலே கழிந்தது.


விவசாயிகள் மனதில் நீங்கா இடம் பிடித்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி, அவர்களை இயற்கை விவசாயம் நோக்கி ஈர்த்த காந்த சக்தி அவர் .



இவரின் தெளிந்த குரல் இல்லாவிட்டால் நமக்கெல்லாம் இயற்கை விவசாயம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.


அத்தகைய இயற்கை போராளியின், இயற்கை தாத்தாவின் கரைந்து போன கனவு பற்றி பார்க்கலாம்.


நம்மாழ்வார் ஒரு பேட்டியில்.,

ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் கண்மாயின் இரண்டு பக்கமும் மரம் வைத்து வளர்க்க வேண்டும். கண்மாயின் உள்ளே யாரும் இறங்க கூடாது. அவ்வாறு வளர்த்த பட்சத்தில் நகரத்தில் இருக்கும் பலர் தங்களது விடுமுறையில் கிராமத்திற்கு வருவார்கள். அந்த கண்மாயில் இளைப்பாற,. கண்மாய் கரையில் குதிரை சவாரி போகலாம். இதை உறுவாக்குவது தான் இலட்சியம்... 


என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருப்பார் அந்த போராளி தாத்தா. 


அவரின் இந்த ஆசை அவர் இருந்த பொழுது நிறைவேரியதா இல்லையா என்பது தெரியாவில்லை. ஆனால் தற்காலத்தில் பல இளைஞர்கள் நம்மாழ்வாரின் இந்த ஆசையை நிறைவேற்ற களமாட ஆரம்பித்துவிட்டார்கள்.


அந்ந போராளி தாத்தாவின் ஆசை நிச்சையம் நிறைவேறும்.


ஒவ்வொரு கிராமங்களிலும்.


வேலை பார்க்க தானே எத்தனையோ பேர் இருக்கிறார்களே... அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். என்று நாம் சும்மா இருக்கலாமா... வாருங்கள் நம்மால் இயன்றதை செய்வோம்..


அந்த இயற்கை போராளி தாத்தாவின் ஆசையை நிறைவேற்றியதில் நாமும் பங்கெடுப்போம்.



இயற்கை போராளி நம்மாழ்வாரின் கரைந்து போன கனவு... இயற்கை போராளி நம்மாழ்வாரின் கரைந்து போன கனவு... Reviewed by செயபிரகாசு on டிசம்பர் 10, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

இந்த இணையதளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி...

Blogger இயக்குவது.