வலசை போகும்
பறவை...
வலசை போகும் பறவைகள் பறக்கும் போது பார்க்க மிக அழகாக இருக்கும்.
பல பறவைகள் ஒரே போல V வடிவில் பல்லாயிரம் மைல் தொலைவில் உள்ள இடத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கும்.
அந்த நூற்றுக்கணக்கான பறவைகளில் ஒரு பறவையை மட்டும் அந்த கூட்டத்தை விட்டு பிரித்து தனியே கூட்டில் அடைத்து வைத்தால்.. அவை பறப்பதற்கு முயற்சி செய்யும்.
எப்படியாவது பறக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சி செய்யும். அந்த கூண்டோடு பறக்கக்கூட திட்டமிடும்.
ஆனால், அந்த வலசை போகும் காலம் முடிந்த உடன் அந்த பறவையை அந்த இருப்புக்கூண்டை திறந்து வைத்தாலும் அவை பறக்காது பறக்கக்கூட முயற்ச்சி செய்யாது.
அவ்வளவு வேகமாக பறந்த பறவை தானே.
பிடித்து கூட்டில் அடைத்த பின்னும் கூண்டோடு பறக்க திட்டமிட்ட பறவைதானே..
ஆனால் தற்போது அது அடைந்து இருந்த கூண்டு திறந்து இருந்தாலும் அதனால் பறக்க முடிவில்லை. பறக்க முடியவில்லை என்று கூறுவதை விட அது பறக்க விரும்பக்கூடவில்லை.
காரணம் அது வலசை போக வேண்டிய காலம் முடிந்து விட்டது.
ஒரு செயலை செய்ய வேண்டிய காலம் முடிந்த பின் நம்மால் எதையும் செய்ய முடியாது.
காலம் முடிந்த பின் பறக்க மறந்த பறவை போல நாம் இருக்கக்கூடாது.
குறித்த காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும்.
ஒரு அறிஞர் கூறுகையில்,
முடிவு எடுத்த சில நிமிடங்களில் முடிவை செயல்படுத்த வேண்டும்., இல்லாவிட்டால் மனது மாறிவிடும் என்கிறர்.
இதுவும் உண்மை தான்.. குறித்த காலத்தில் செயலை செயது முடிக்க வேண்டும்..
அந்த காலம் முடிவெடுத்த சில நிமிடங்களாகவே இருந்தால் சாலச்சிறந்தது.
Reviewed by செயபிரகாசு
on
டிசம்பர் 10, 2020
Rating:



கருத்துகள் இல்லை:
இந்த இணையதளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி...